தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை; சுவாமி உலா
ADDED :473 days ago
பெங்களூரு; தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சுவாமி உலா நடைபெற்றது.
காவல் பைரசந்திரா, தொட்டண்ணாநகர், தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நடந்த சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ராஜ குத்து விளக்கிற்கு பூஜை செய்தனர். விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் பல்லக்கில் பிரகாரத்ததை சுற்றி வலம் வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.