உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

திட்டக்குடி;  திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சுப்பிரமணிய சுவாமி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மஹாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !