உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்; இரவில் 5 கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களாசாசனம்; இரவில் 5 கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஐந்தாம் திருநாளான இன்று (ஆக.3) காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவை நடக்கிறது.இன்று காலை 10:00 மணிக்கு கோயில் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளி, பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கோயிலில் பெரிய அன்ன வாகனத்தில் ஆண்டாள், சிறிய அன்ன வாகனத்தில் பெரியாழ்வார், ஐந்து கருட வாகனங்களில் ரெங்க மன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !