உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர் நிலைகளில் குவிந்த மக்கள்

ஆடி பெருக்கை கொண்டாட, நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர். உலக மக்கள் நன்மை, விவசாயம், கால்நடைகள் செழிக்க ஆண்டுதோறும் ஆடி பெருக்கன்று, காவிரியை வணங்குவது, தமிழர்கள் மரபாகும்.ஆடி பெருக்கு தினத்தன்று அதிகாலையில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைக்கு, குடும்பத்துடன் சென்று நீராடிய பின், சப்த கன்னிமார்கள், முன்னோர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு நடத்துவர். அதன் பின் நீர் நிலைகள் அருகில் உள்ள சுவாமிகளை வழிபட்ட பின், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் விருந்து சாப்பிடுவது வழக்கம். அதுபோல் இன்றும் காவிரி தாயை வணங்கிய பின் முன்னோர்களுக்கு படையலிட்டு, ஆற்றில் விட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் பொதுமக்கள் வழிபாடு; புதுமணத் தம்பதிகள் பூஜைகள் செய்து தாலி மாற்றிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !