வடவள்ளி வீர மாத்ரே அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED :786 days ago
கோவை; வடவள்ளி, கல்பனா நகர் அருள்மிகு ஸ்ரீ வீர மாத்ரே அம்மன் கோவிலில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.