ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்தம் பாசி படர்ந்து அசுத்தம்: பக்தர்கள் அவதி
ADDED :415 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்த குளம் பாசி படர்ந்து அசுத்தமாக உள்ளதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடிச் செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்த குளம், கோயிலில் இருந்து 500 மீ.,ல் உள்ளது. கோயிலுக்கு வெளியில் உள்ள இத்தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். அதன்படி ராமர் தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடி வரும் நிலையில் தற்போது கோடை மழை பொய்த்ததால் குளத்தில் நீர்மட்டம் குறைந்தது. மேலும் துார்வாராமல் உள்ளதாலும், தீர்த்தத்தில் பாசிப் படர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடி செல்கின்றனர். எனவே படர்ந்துள்ள பாசியை அகற்றி கோடை காலத்தில் குளத்தில் துார்வார கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.