உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடிப்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி; விராலிப்பட்டியில் கொல்லிமக்கள் வகையறா பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பொன்னாங்கண் வாசல் கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஆக.,18ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின.நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விநாயகர், சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்திருந்தனர். அலங்காநல்லுரர் அருகே 15பி. மேட்டுப்பட்டியில் இடைக்காடர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கலச பூஜை, 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசம் மற்றும் நவகிரக கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.சித்தர் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !