சாரம் சித்திபுத்தி விஜய கணபதி கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :439 days ago
புதுச்சேரி; சாரம் சித்திபுத்தி விஜய கணபதி கோவிலில் உள்ள பாலகிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி சாரம் நடுத்தெருவில் சித்திபுத்தி விஜயகணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள பாலகிருஷ்ணருக்கு, 4ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து வெண்ணெய் தாழி அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இன்று(27 ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடிதல் நடக்கிறது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.