/
கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா 2ம் நாள்; கேடகம் வாகனத்தில் சுவாமி உலா
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா 2ம் நாள்; கேடகம் வாகனத்தில் சுவாமி உலா
ADDED :562 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா ஆக.,29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இன்று அலங்காரம் செய்யப்பட்ட உற்ஸவர் விநாயகர் கேடகம் வாகனத்தில் வீதி உலா வந்தார். வீதி உலா வந்த விநாயகரை தெருக்களில் கோலமிட்டு பெண்கள் வரவேற்றனர். முன்னதாக மூலவர் உற்சவருக்கு நடந்த அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.