உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை பாதக்கருப்பு சுவாமி கோவில் ஆவணி பொங்கல் திருவிழா

புதுக்கோட்டை பாதக்கருப்பு சுவாமி கோவில் ஆவணி பொங்கல் திருவிழா

நத்தம்; நத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தில் பாதக்கருப்பு சுவாமி கோவில் ஆவணி பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு வர்ண பூமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பாக பொங்கல், கிடாய்கள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !