உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாக்பூரில் தன்ஹா போலா திருவிழா; தீய சக்திகளை விரட்ட ஊர்வலம் சென்ற காளி!

நாக்பூரில் தன்ஹா போலா திருவிழா; தீய சக்திகளை விரட்ட ஊர்வலம் சென்ற காளி!

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த தன்ஹா போலா திருவிழாவின் ஒரு பகுதியாக, காளி மற்றும் பிளி பொம்மைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. இவை தீய சக்திகளை விரட்டும் என மக்களால் நம்பப்படுகிறது.


நாக்பூரில் கொண்டாடப்படும் பழமையான திருவிழா தன்ஹா போலா. பாரம்பரியத்தின் படி, பக்தர்கள் தீய சக்திகளைக் குறிக்கும் உருவங்களை ஏந்தி ஊர்வலம் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பரில் நடைபெறும் இந்த விழா நேற்று கொண்டாடப்பட்டது. தீமையைக் குறிக்கும் பாரிய உருவங்கள் தெருக்களில் அணிவகுத்து, இசை, நடனத்துடன் எடுத்து செல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டனர். இவ்வாறு செய்வதால் பூச்சிகள் மற்றும் தீய சக்திகம் விலகும் என மக்கள் நம்புகின்றனர். நேற்றைய விழாவில் காளி மற்றும் பிளி பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !