அரோகரா கோஷத்துடன் பழநி கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :4717 days ago
பழநி: பழநி மலை கோயிலில், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனும் சரணகோஷத்துடன், திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டி திருவிழா நிறைவாக, திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சண்முகவள்ளி தெய்வானைதெற்கு வெளிப்பிரகார மண்டபத்திற்கு எழுந்தருளினர். திருக்கல்யாண சிறப்பு பூஜைகளை, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கசிவாச்சாரியார், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். நிகழ்ச்சியில், வேணுகோபால் எம்.எல்.ஏ., டி.ஐ.ஜி., தமிழ்செல்வன், கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், சித்தனாதன் சன்ஸ் செந்தில், கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாத ஸ்டால் ஹரிஹரமுத்து, சாது சண்முக அடிகள், ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, நகராட்சி துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜா தங்க மாளிகை உபயமாக திருக்கல்யாணம் நடந்தது. சங்கராலயம் சார்பில் சீர்வரிசை தரப்பட்டது.