/
கோயில்கள் செய்திகள் / சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :707 days ago
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தர்மலிங்கேஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தீபஒளியில் ஜொலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.