உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா

அவத்தாண்டையில் வில்லாயுத மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா

சாயல்குடி; சாயல்குடி அருகே அவதாண்டை கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த செப். 14 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று இரண்டாம் கால யாகசாலையில் எந்திர பிரதிஷ்டை, விக்கிரக பிரதிஷ்டை உள்ளிட்டவைகளும், இன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு வில்லாயுத மூர்த்தி, விநாயகர், முருகன், அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதி சத்தியேந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மதுரை ஆதீனம் சுந்தரமூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமி, சிந்தலக்கரை காளி பராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி, அகத்தியர் அறக்கட்டளை ஈஸ்வர் ராஜலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவாற்றினர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை வில்லாயுத மூர்த்தி கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !