உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த பக்தர்கள்

பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த பக்தர்கள்

மேலுார்; கீழவளவு பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் கோயில் அருகே நூறு வருடத்திற்கு முந்தைய பழமையான ஆலமரம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயிலையும் மரத்தையும் சுற்றி வந்து சுவாமி கும்பிடுவது வழக்கம். கடந்த வாரம் வீசிய பலத்த காற்றுக்கு பழமையான மரத்தின் பக்கவாட்டு மரம் வேருடன் சாய்ந்தது. சாய்ந்த மரத்தை சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் பக்தர்கள் வைக்கோல் பிரி சுற்றி, தண்ணீர் ஊற்றி பராமரித்து வேரை பாதுகாத்தனர். இன்று மரத்திற்கு தீபாரதனை காண்பித்து நடவு செய்தனர். இந்நிலையில் அங்கு சுவாமி கும்பிட வந்த பக்தர்கள் கோகுல், ஜனனி உள்ளிட்டோர் மரத்தை பராமரிப்பதற்கு ஆட்களை நியமித்து மரத்தை வளர்க்க ஏற்பாடு செய்தனர். சாய்ந்த ஆலமரத்தை நடவு செய்த சம்பவம் இப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !