சுந்தராபுரம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :594 days ago
கோவை ; கோவை, சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.