பிடாரி செல்லியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
                              ADDED :400 days ago 
                            
                          
                          ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ளது, பிடாரி செல்லியம்மன் கோவில். சிதிலமடைந்தது காணப்பட்ட இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணி முடிந்து, கடந்த மாதம் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இன்று மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.