பரமக்குடி அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா
ADDED :456 days ago
பரமக்குடி; பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடக்கிறது. பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவையொட்டி முத்து பாரத்துதல் நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பு தினம் தோறும் ஆண்கள், பெண்கள் கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடி வருகின்றனர். இதே போல் பரமக்குடி அருகே உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் முளைப்பாரி விழா நடக்கும் சூழலில், நேற்று இரவு பாரிகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி நல்ல மழை பெய்து, மகசூல் கிடைக்க இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.