திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு புதிய நடைமுறை
ADDED :456 days ago
திருப்பதி; திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பிற மதத்தினருக்கு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பிற மதத்தினர் தரிசனம் செய்வதற்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பிற மதத்தினர், தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பம் இட்டு அளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.