உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வீரஆஞ்சநேய சுவாமி

சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வீரஆஞ்சநேய சுவாமி

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியையொட்டி மூலவர் ஆஞ்சநேயருக்கு நேற்று காலை, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !