காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனி சிறப்பு வழிபாடு
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் நீல நிறப் பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேல வாத்தியம் முழங்க திருக்கோவில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து திருவாராதனம் மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சேமிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மேலும் விழா ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் ராமசாமி கார்த்திகேயன் சுஜாதா ஜவகர் குணசேகரன் திருக்கோவில் செயல் அலுவலர் சந்திரமதி மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் மிராசுதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.