புரட்டாசி சனி வார பூஜை; அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :569 days ago
சின்னாளபட்டி; புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயிலில் அன்னதானம் நடந்தது. மூலவருக்கு துளசி, மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது மகாதீபாராதனையுடன், தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில், சனி வார சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.