பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஐப்பசி பிறப்பு சிறப்பு வழிபாடு
ADDED :717 days ago
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வள்ளி தேவசேனா சமேதரராக உற்சவர் முருகபெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.