ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்
ADDED :385 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணிக்கு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருவாய்மொழி சேவா காலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். அக். 28 வரை 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.