உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மனுக்கு 1008 கிலோ பூக்களால் பூச்சாட்டுதல் விமர்சை

ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மனுக்கு 1008 கிலோ பூக்களால் பூச்சாட்டுதல் விமர்சை

நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக மற்ற மாரியம்மன் ஆலயங்களில் திருவிழா தொடங்கும் முன் கம்பம் நடப்படுவது வழக்கம். 


திருவிழா முடிந்த பிறகு நீர்நிலைகளில் அதை விடப்படும் நிலையில், ஆனால் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில்  எப்பொழுதும் கம்பம் மற்றும் அம்மன் கழுத்தில் நிலையாக தாலி இருப்பதால் இதற்கு நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பெயர் வந்தது. வருடம் தோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் ஐப்பசி 5ம் நாள் இன்று பூச்சாட்டுதலுடன்  திருவிழாவானது தொடங்கியது. மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊரின் முக்கிய பிரமுகர்கள் கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து பூக்கூடைகளை நகரின் முக்கிய வழியாக ஊர்வலமாகச் வந்து பின்னர் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு பொதுமக்கள் வேண்டுதலுடன் கொண்டு வந்திருந்த பூக்களால் அம்மனை அலங்கரித்து அபிஷேகதாரணை செய்தனர்.பின்னர் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக சுமார்  1008 கிலோ பூக்களால் அம்மனை அலங்கரித்து பல்வேறு அதரனை நடைபெற்றது.விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் கலந்துகொண்டு நித்திய சுமங்கலி மாரியம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !