உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை, மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம்; தேதிகள் அறிவிப்பு

கோவை, மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம்; தேதிகள் அறிவிப்பு

கோவை; மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் சூரசம்ஹார திருக்கல்யாண விழா நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து அறங்காவலர் குழு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் :- பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் மாதம் 2 ம் தேதி காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் சூரசம்ஹார திருக்கல்யாண விழா தொடங்குகிறது. நவம்பர் 8 ம் தேதி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்களும், பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். என்று தெரிவித்து உள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !