உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கோவிலில் இந்த ஆண்டு, ஐப்பசி பூர உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான, திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கீழரதவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழ வீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின், மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று, 28ம் தேதி, பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூரச்சலங்கை உற்சவம், உற்சவ அம்பாளுக்கு மகாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. நாளை 29ம் தேதி இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !