உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. 


சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் கோமதி அம்பாள்வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11ம் திருநாளான நேற்று மதியம் ஒரு மணியளவில் கோமதி அம்பாள் கீழரதவீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, சங்கரலிங்கசுவாமியை காண வேண்டி தபசு இருந்தார். அங்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை5.30 மணி அளவில் சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் வீதியுலா வந்து கோயிலுக்கு வந்தனர். பின்பு இரவு 10 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் சங்கரலிங்க சுவாமிக்கும், கோமதி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (29ம் தேதி) பட்டினப்பிரவேசம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !