அறுபடைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத முருகனின் ஒரே படை வீடு எது தெரியுமா?
ADDED :431 days ago
கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும், முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். ஆனால், முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடக்காமல் இருக்கும். அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. இக்கோயில் முருகனின் 5ஆம் படைவீடு ஆகும். சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவில் ஆகும். தணிகை என்பதன் பொருளே சினம் தணிதல் தான். திருத்தணி முருகன் கோயிலில், முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார். இதன் காரணமாக, இக்கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது இல்லை. இருப்பினும் முருகனின் அருளைப் பெறக்கூடிய கந்தசஷ்டி விழாா மட்டும் கொண்டாடப்படுகிறது.