மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
303 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
303 days ago
அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
303 days ago
கூடலுார்: சபரிமலை சீசனுக்காக வண்டிப்பெரியாறிலிருந்து வல்லக்கடவு வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் புல்மேடு வனப்பாதையை சீரமைக்கும் பணியை வனத்துறையினர் துவக்கினர்.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசன் நவ., 16ல் துவங்குகிறது. ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல குமுளி, எரிமேலி, பம்பை வழியாக ஒரு பாதையும், வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, புல்மேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. குமுளியில் இருந்து பம்பை வழியாக செல்ல 150 கி.மீ., பயணிக்க வேண்டும். ஆனால் புல் மேடு வழியாக 36 கி.மீ.,ல் கோயிலை அடைந்து விடலாம். 2010 ஜனவரியில் புல்மேட்டில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து புல்மேடு வனப்பாதை மூடப்பட்டது. அங்கிருந்து 14 கி.மீ., தூரம் உள்ள சத்திரத்திலிருந்து கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்தாண்டு புல்மேடு வனப்பாதையில் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சீசன் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் வண்டிப்பெரியாறு புல்மேடு வனப்பாதையை பெரியாறு புலிகள் சரணாலய மேற்கு துணை இயக்குனர் சந்தீப் மேற்பார்வையில் வனத்துறையினர் சீரமைக்கும் பணியை துவக்கினர். பாதையில் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புல்மேடு, சத்திரம் வனப்பாதையில் ஒவ்வொரு அரை கி.மீ., தூர இடைவெளியில் குடிநீர் வழங்குவதற்கான பணி நடக்கிறது. மேலும் சன்னிதானம் வரை பக்தர்கள் வனப்பாதையில் நடந்து செல்லும்போது வனவிலங்குகள் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்படும் என்றனர்.
303 days ago
303 days ago
303 days ago