நெல்லை சாலைக்குமரன் கோயில் தல வரலாறு நுால் வெளியீடு
ADDED :380 days ago
திருநெல்வேலி; நெல்லை பாளையஞ் சாலைக்குமரன் கோயில் தலவரலாறு நூல் நெல்லையில் வெளியிடப்பட்டது. நெல்லை ஜங்ஷன் மதிதா., இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் கந்தகுமார் எழுதிய பாளையஞ் சாலைக்குமரன் தலவரலாறு நூல் கோயிலில் வைத்து வெளியிடப்பட்டது. நூலை பொருநை இலக்கிய வட்டபுரவலர் தளவாய்நாதன் வெளியிட, கோயில் அர்ச்சகர் கணேசபட்டர் பெற்றுக் கொண்டார். பக்தர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்பட்டது. விழாவில் ராகவேந்திரா ஸ்டூடியோ ரோட்டேரியன் ராஜ்பால், மாரியப்பன், கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.