அரசூரிலிருந்து மயிலம் முருகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை
ADDED :331 days ago
திருவெண்ணெய்நல்லுார்; இந்து தர்ம இயக்கம் மற்றும் சுயம்பு சேவா அறக்கட்டளை சார்பில் அரசூரிலிருந்து மயிலம் முருகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர். நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராஜ்நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில தர்ம இயக்க அமைப்பாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ்., உடற்பயிற்ச்சியாளர் பாலாஜி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வேலு ஆகியோர் கொடியசைத்து பாதயாத்திரையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இருவேல்பட்டு, பொய்கையரசூர், தணியாலம்பட்டு ஆனத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். மாநில பொறுப்பாளர் கணபதி மற்றும் கோட்ட பொறுப்பாளர் அர்ஜூனன் நன்றி கூறினர்.