உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா – 4; லாபம் கொழிக்க... மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா..!

தினமும் ஒரு சாஸ்தா – 4; லாபம் கொழிக்க... மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா..!

திருநெல்வேலி மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தாவை தரிசித்தால் தொழிலில் லாபம் கொழிக்கும். பக்தர்கள் சிலர் சாஸ்தா கோயில் கட்ட பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பிடிமண் எடுத்தனர். தாமிரபரணி ஆற்றங்கரையில் மேலநத்தம் என்னும் இடத்தில் கோயில் கட்டினர். ஒருமுறை பக்தர் ஒருவர் சுவாமிக்கு அபிேஷகம் செய்ய ஒரு குடம் எண்ணெய்யுடன் வந்த போது இரண்டு காட்டு யானைகள் குறுக்கிட்டன. அதில் ஒன்று துதிக்கையால் பக்தரை துாக்கித் தன் காலடியில் கிடத்தியது. அதைக் கண்டவர்கள் ஓடினர். சற்று நேரத்தில் இரு யானைகளும் காட்டுக்குள் சென்றன. அதன்பின் சுவாமிக்கு அபிேஷகம் செய்தார் பக்தர். இதனால் சுவாமிக்கு ‘ஆனையப்ப சாஸ்தா’ என பெயர் வந்தது. கருவறையில் பூரணா, புஷ்காலவுடன் யானை வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கிறார் சாஸ்தா. பங்குனி உத்திரத்திருவிழாவும், அதற்கு முதல் நாள் லட்சார்ச்சனையும் நடக்கும்.  


எப்படி செல்வது: திருநெல்வேலி டவுனில் இருந்து 3 கி.மீ.,

நேரம்: காலை 8.00 –  12 மணி, மதியம் 3:00 – 5:00 மணி

தொடர்புக்கு: 94431 65160, 80569 08661


அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில் 

நேரம்: காலை 5:30 – 12:30 மணி, மாலை 4:00 – 9:00 மணி

தொடர்புக்கு: 0462 – 233 9910


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !