/
கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழம் வழங்கல்
சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழம் வழங்கல்
ADDED :350 days ago
கூடலுார்; சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கூடலுாரில் தண்ணீர் பாட்டில், பழம் வழங்கப்பட்டது.
கூடலுாரைச் சேர்ந்த சரவணகுமார், சேர் டேபிள் வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். ஐயப்ப பக்தரான இவர், கடந்த 15 ஆண்டுகளாக சபரிமலைக்கு கூடலுார் வழியாக நடந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டும் சீசன் துவங்கியதில் இருந்து நடந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தண்ணீர் பாட்டில், வாழைப்பழத்தை வழங்குவதுடன் பக்தர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று அனுப்பி வைக்கிறார். பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்குவது மன நிறைவு ஏற்படுவதுடன் கூடலுாரை அடுத்து 6 கி.மீ., தூர குமுளி மலைப்பாதையில் நடந்து செல்ல தண்ணீர்பாட்டில், வாழைப்பழம் உதவியாக இருக்கும் என சரவணகுமார் தெரிவித்தார்.