பெரியகுளம் வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை நடந்தது
ADDED :281 days ago
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு திருப்பணிகள் துவங்க உள்ளது. அனைத்து பணிகளும் தங்குதடையின்றி சிறப்பாக நடப்பதற்கு கோயிலில் நவ.25 முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நவ. 27 வரை மூன்று நாட்கள் நடந்தது. பவித்ரம் உற்ஸவம் பூஜையில் வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், நவக்கிரகம், விநாயகர், நாகர் உட்பட ஏராளமான பரிவார தெய்வங்களுக்கு பவித்திர மாலை அணிவித்து பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பவித்திர மாலை வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று வரதராஜப் பெருமாளுக்கு அன்னக்கூடை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.