மூணாறில் பிரணவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகைவிழா
ADDED :4771 days ago
மூணாறு: மூணாறில் பிரணவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை திருவிழா நடந்தது.காலை பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து, காவடியுடன் பால் குடம் எடுத்து வரப்பட்டது.அதன்பின் முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன.மாலையில் கோயில் அருகில் உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மூணாறு பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு கார்த்திகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டதால்,நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.இரவில் சப்பர ஊர்வலம் நடந்தது.