உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோவிலில் நவபாஷாண மூலவர் சிலை ஆய்வு

பழநி மலைக்கோவிலில் நவபாஷாண மூலவர் சிலை ஆய்வு

பழநி; பழநி மலைக்கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.


போகர் சித்தரால் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பழநி கோயிலில் மூலவராக வழிபடப்படுகிறது. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். சிறப்பு மிக்க இந்த பழநி மலைக்கோவிலில், ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். நீதிபதி பொங்கியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஐ.ஐ.டி., குழுவினர் கருவறைக்குள் சென்று நவபாஷாண மூலவர் சிலையை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !