பழநிக்கு திருஆவினன்குடி என்ற பெயர் வழங்குவது ஏன்?
ADDED :4808 days ago
லட்சுமி(திரு), காமதேனு(ஆ), சூரியன்(இனன்), அக்னி(குடி) ஆகியோர் பழநியில் முருகப் பெருமானை வழிபட்டு நற்பேறு பெற்றனர். அதனால் அவர்களின் பெயர்களான திரு, ஆ, இனன், குடி ஆகியவற்றை ஒன்றாக்கி அத்தலத்தின் பெயராக வழங்கினர். சங்ககாலத்தில் வாழ்ந்த ஆவியர்குடி இன மன்னர்கள் வழிபட்ட இடமே ஆவினன்குடி என்று திரிந்ததாகவும் கூறுவர்.