உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.

பழநி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயில் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் தரிசனம் செய்ய பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்தனர். கோயிலில் கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. பூங்கா ரோடு, இட்டேரி ரோடு, கிரி வீதியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலை, குறவன் பாறை ரோடு, அய்யம்புள்ளி ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து இடையூறு அதிக அளவில் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !