வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட பூமி பூஜை
ADDED :311 days ago
செஞ்சி; செவலபுரையில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. செஞ்சி அடுத்த செவலபுரையில் தனி இடத்தில் வெங்கடேச பெருமாள் வைத்து பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இங்கு புதிதாக பெரிய அளவில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு ஹோமமும், புதிய கோவிலுக்கான பூமி பூஜையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் செஞ்சி தமிழ்சங்க தலைவர் கவிதாஸ், ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.