உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்

காலீஸ்வரர் கோவில் மண்டபம் சிதிலமடைந்து வரும் அவலம்

உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் சீட்டணஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சிவகாம சுந்தரி சமேத காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான மண்டபம் ஒன்று உள்ளது. இதில், அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. தற்போது, மண்டபம் பராமரிப்பு இல்லாமலும், சிலைகள் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. மேலும், மண்டப சுவர்களில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மண்டப கட்டடம் நாளுக்கு நாள் வலுவிழந்து, சேதமடைந்தும் வருகிறது. எனவே, சிதிலமடைந்து வரும் காலீஸ்வரர் கோவில் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !