பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை செவ்வாய் சிறப்பு வழிபாடு
ADDED :628 days ago
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வெள்ளிக்காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.