அனுஷம் நட்சத்திரம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :335 days ago
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் மாதம்தோறும் வரும் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று மாலை நடைபெற்ற வழிபாட்டில் காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.