சவேரியார் தேர்பவனி
ADDED :4661 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சவேரியார் ஆலயத்தில் நவ., 24ம் தேதி சவேரியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலையில் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடந்தது. நேற்று திருவிழா திருப்பலியும் இரவு 7.30 மணிக்கு தேர்பவனியும் நடந்தது. பாதிரியார் ராஜமாணிக்கம், உதவி பாதிரியார் தாமஸ் பரிபாலன் ஆகியோர் அர்சித்து சவேரியார் தேர்பவனியை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேர் ஆலயத்தை அடைந்தது.