கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருத்தேரோட்டம்
ADDED :297 days ago
கோவை; கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சண்முக சுந்தரர் முருகப்பெருமானின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரின் உட்பகுதியில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.