திருவாரூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் வழிபாடு
ADDED :297 days ago
திருவாரூர்; திருவாரூர் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் கீழ வீதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் அதிகாலை முதலில் தீபங்கள் ஏற்றி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.