உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் போகர் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபட்ட யோகி பாபு

பழநி கோயிலில் போகர் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபட்ட யோகி பாபு

பழநி; பழநி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தார். பழநி முருகன் கோயிலுக்கு நேற்று நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். ரோப்கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்ற அவர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பின் போகர் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபட்டார். மேலும் சில சன்னதிகளில் விளக்கேற்றி வழிபட்டார். அதன் பின் ரோப் கார் மூலம் அடிவாரப் பகுதிக்கு வந்தார். கோயில் சென்ற அவருடன் பக்தர்கள், அவருடைய ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !