உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு புடவை சாத்தி வழிபட்ட துர்கா ஸ்டாலின்

புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு புடவை சாத்தி வழிபட்ட துர்கா ஸ்டாலின்

தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், துர்கா ஸ்டாலின் நேற்று மாலை வழிபட்டார்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு நேற்று மாலை துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ஐயாறப்பர் சன்னதி, அறம்வளர்த்த நாயகி சன்னதியில் துர்கா ஸ்டாலின் வழிபட்டார். இதையடுத்து, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின், அம்மனுக்கு புடவை சாத்தி வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !