உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் பெருமாள் கோயில் சிலை உடைப்பு

திண்டுக்கல்லில் பெருமாள் கோயில் சிலை உடைப்பு

திண்டுக்கல்; திண்டுக்கல் கரூர் ரோடு என்.எஸ்.நகர் லட்சுமிநகர் ஸ்ரீ ராம பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார், விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.


திண்டுக்கல் கரூர் ரோடு என்.எஸ்.நகர் லட்சுமிநகர் ஸ்ரீ ராம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கருடாழ்வார், விநாயகர், நந்தி சிலைகள் உள்ளன. நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கோயிலில் உள்ள கருடாழ்வார் சிலை, நந்தி சிலையை உடைத்துள்ளனர். இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். குடிபோதையில் சிலர் இதை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !