வளர்பிறை அஷ்டமி; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :575 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று காலை பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பிறகு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.